சாலூர் கிராம கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போதைக்கும்பல் தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல்: போலீஸ் எஸ்.பி.யிடம் மக்கள் புகார்
சிவகங்கை, ஜன.
- சிவகங்கை மாவட்டம் சாலூர் கிரா மத்தைச் சேர்ந்த மாணவிகள் சிவகங்கை அரசு கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20ஆம் தேதி இரவு கூட்டுறவு பட்டி விளக்கில் இறங்கி சாலூர் வழியாக மாணவிகள் நடந்து சென்ற போது, மதுபோதையில் இருந்த நான்கு முதல் ஆறு பேர் கொண்ட அடையாளம் தெரியாத நபர்கள் 3 இருசக்கர வாகனங்க ளில் வந்து மாணவிகளை வழி மறித்துள்ளனர். அவர்கள் மாணவிகளிடம் அவதூறாக பேசி, கைகளைப் பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த மாணவிகள் அரு கிலுள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அப்பகுதி மக்கள் சத்தம் போட்டதால் அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. அரை மணி நேரத்திற்கு பின்னர், இடையமேலூர், வேலம்பட்டி, தேவ னிப்பட்டி, காரம்ஒடை பகுதிகளைச் சேர்ந்த வர்கள் என கூறப்படும் அதே நபர்கள் மீண்டும் இருசக்கர வாகனத்தில் வந்து, அங்குள்ள கடை அருகே வாகனத்தை நிறுத்தி பொதுமக்களைம் அவதூறாக பேசி யுள்ளனர். பெண்களை துன்புறுத்துவது வழக்கம் என மிரட்டியதாகவும் கூறப்படு கிறது. இதனைத் தட்டிக்கேட்ட பூமிநாதன் என்பவரை அவர்கள் தாக்கியதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?