பாஜகவிற்கு ஆதரவாக வேலை செய்து தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை சிபிஐ, அமலாக்கத்துறை உருவாக்கியுள்ளது ப.மாணிக்கம்தாகூர் எம்.பி., கடும் விமர்சனம்

பாஜகவிற்கு ஆதரவாக வேலை செய்து தமிழகத்தில் என்டிஏ கூட்டணியை சிபிஐ, அமலாக்கத்துறை உருவாக்கியுள்ளது ப.மாணிக்கம்தாகூர் எம்.பி., கடும் விமர்சனம்



விருதுநகர், ஜன.

- 100 நாள் வேலைத்திட்டத்தை சீரழிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து சிவஞா னபுரம் ஊராட்சி அலுலவகம் முன்பு போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விருதுநகர் மக்களவை உறுப்பி னர் ப.மாணிக்கம் தாகூர், பின்னர் செய்தி யாளர்களை சந்தித்து, கூறியதாவது: 100 நாள் வேலை உறுதி திட்டம் நிறுத்தப்பட்டதால் இந்தியாவில் 13 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 13 கோடி பேரின் வயிற்றில் மோடி அடித்து விட்டார். இக் குடும்பங்களை நடுரோட்டில் நிறுத்திய புண்ணியவான் மோடி தான். இத்திட்டத்தை வெந்நீரூற்றி கொல்வதை போல மோடி அரசு கொன்று கொண்டி ருக்கிறது. பிரதமர் மோடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு? தமிழகத்திற்கு தேர்தல் வந்தால் மட்டுமே மோடி ஓடோடி வருவார். மதுரை யில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019இல் அடிக்கல் நாட்டப்பட்டு, தற்போது வரை கட்டி முடிக்கவில்லை. மேலும், மதுரை, கோவை ஆகிய முக்கிய நகரங்களுக்கு வர வேண்டிய மெட்ரோ இரயில் திட்டங்க ளுக்கும், ஒசூர் விமான நிலையத்திற்கும் அனுமதி வழங்கவில்லை. மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கும், தமிழகத்தில் புதிய இரயில் திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடு கின்றனர். வந்தே பாரத் இரயில் விருதுநக ரில் சந்திப்பில் நிற்க மறுக்கிறது. தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மை யுடன் பார்க்கிறார் மோடி. பாஜகவிற்கு ஆதரவாக அமலாக்கத் துறை (ஈ.டி), சிபிஐ, ஐ.டி ஆகிய அரசு அமைப்புகள் கடுமையாக, இரவு பகல் பார்க்காமல் வேலை செய்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை (என்.டி.ஏ) உருவாக்கியுள்ளனர். த.வெ.க விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு? பதிவு செய்த அனைத்துக் கட்சிக்கும் தேர்தல் ஆணையம் சின்னம் கொடுப்பது வழக்கம். இதை மக்கள் ஏற்றுக் கொள்வார்க ளா? என்பது தான் முக்கியம் என தெரிவித்தார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளதா என்ற கேள்விக்கு? காங்கிரஸ் தலைவர்கள் மல்லி கார்ஜூன கார்கே, இராகுல் காந்தி ஆகியோ ரின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்றார். ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளியேறிய கேள்விக்கு ? தொடர்ந்து சட்டசபையில் இருந்து வெளியேறுவது ஆளுநர் ரவியின் வியாதியாக உள்ளது. அவருக்கு வந்த வியாதி அப்படியே கேரளா, கர்நாடாக மாநில ஆளுநர்களுக்கும் பரவியுள்ளது. இதனை தடுக்க நாடாளுமன்றத்தில வலி யுறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%