சிஎஸ்கே – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட்: வேலம்மாள் பள்ளிகள் வெற்றி

சிஎஸ்கே – திருவள்ளூர் டிசிஏ கிரிக்கெட்: வேலம்மாள் பள்ளிகள் வெற்றி



 திருவள்ளூர், ஜன. 


சிஎஸ்கே–திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் பள்ளிகளுக்கான கிரிக்கெட் லீக் போட்டியில் வேலம்மாள் பள்ளிகள் வெற்றி பெற்றன.


குரூப் இ – பிரிவில் விளையாடிய வேலம்மாள் வித்யாலயா (அனெக்சர்) அணி, 30 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் குவித்தது. எஸ். யுவனேஷ் 77 பந்துகளில் 16 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 115 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆர்.வி. புவனேந்திரா 79 ரன்கள் சேர்த்தார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய ஸ்ரீ வெங்கடேஸ்வரா (புழல்) அணி 21.1 ஓவர்களில் 51 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அனிருத் நாயர் 3/4 என்ற சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார்.


குரூப் எச் – போட்டியில் எபெனீசர் (கொரட்டூர்) அணி 30 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 367 ரன்கள் குவித்து ஆதிக்கம் செலுத்தியது. கே.எம். நிவாஷ் 108 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார். எஸ்.என். தர்ஷன் 64 பந்துகளில் 103 ரன்கள் எடுத்தார். ஆர்.டி. வெற்றிசெல்வன் 87 ரன்கள் சேர்த்தார். பெரிய இலக்குடன் களம் இறங்கிய எஸ்பிஓஏ குளோபல் பள்ளி 20.5 ஓவர்களில் 58 ரன்களுக்கு வெளியேறியது. கே.எஸ். பிரணவ் ஆதித்யா (3/3), ஏ. பரிநாய் ஜெயின் (3/15) பந்துவீச்சில் சிறந்தனர்.


குரூப் ஜி – பிரிவில் களம் இறங்கிய வேலம்மாள் வித்யாலயா (ஆலப்பாக்கம்) 212/8 ரன்கள் எடுத்தது. ஜே. முகம்மது சுஹைல் 51, லோஹித் 71 ரன்கள் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய வேலம்மாள் நியூஜென் (மாதவரம்) அணி 19.5 ஓவர்களில் 79 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஏ. நரேஷ் குமார் (3/12), ஆர். ராகுல் கிருஷ்ணா (3/2) அபார பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.


குரூப் எப் – போட்டியில் செயின்ட்.தாமஸ் (மணலி) அணி 25.5 ஓவர்களில் 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எஸ். சாய் சந்தோஷ் 5/35 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இலக்கை விரட்டிய ஆலிவ் ட்ரீ குளோபல் பள்ளி 22.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பி. தர்ஷன் 38 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.


இந்த போட்டிகள், எதிர்கால நட்சத்திரங்களாக உருவாகும் பள்ளி மாணவர்களின் திறமையை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%