வாசு கையில் லீவு லெட்டரை எடுத்துக் கொண்டு பயத்துடன் மேனேஜர் அறைக்குள் நுழைந்தான். லீவு சாங்ஷன் ஆகுமா, ஆகாதாஎன்ன சொல்லப்போகிறது சிடுமூஞ்சி மேனேஜர் ? மனத்தில் கேள்வி எழுந்தது.
மேனேஜர் முகம் எப்பொழுதும் சிடு சிடு வென்று இருக்கும். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து க்கொ ண் டிருக்கும் ! மருந்துக்குக் கூட சிரிப்பை பார்க்கமுடியாது.
உடல் நடுங்க மேனேஜர் அறைக்குள்
நுழைந்த வாசு , " எக்ஸ்யூஸ்மி சார் !"
என அழைக்க, சில நிமிடங்கள் கழித்து தலை நிமிர்ந்தார் மேனேஜர். சுட்டெரிக்கும் கண்களால் பார்த்தார். சிவபெருமான் நக்கீரன் உடலை சுட்டெரித்தது போல் தன் உடலும் நெருப்பில் சுடுவது மாதிரி உணர்வு ஏற்பட்டது வாசுவுக்கு.
" என்னய்யா வேணும் ? கூட்டுட்டு மரம் மாதிரி நிக்குறே ?" எடுத்த எடுப்பில் இப்படி வாசுவைச் சாடினார்.
' போய்யா மேனேஜர் ! உன்கிட்டப் போய் இப்படி வந்து லோல் படறதக் காட்டிலும் எனக்கு லீவே தேவையி ல்லை. ' மனத்தில்தான் தைரியமாக வார்த்தைகள்எழுந்தன. முகம் அஷ்ட கோணலாய் ஓருவித அசட்டு சிரிப்பும் தோன்ற, ஆடு திருடிய கள்வன் போல் மலங்க மலங்க விழித்து நின்றான் வாசு.
வாசுவைப் பார்க்க பாவமாய் இருந்தது.மேனேஜருக்கு அவன்பால் அபூர்வமாக பரிவு ஏற்பட்டது.
" ஹலோ வாசு ! எதுக்கு இங்கவந்தே ?.
சட்டு புட்டுன்னு விஷயத்தைச்?சொல் லிட்டு நடையைக் கட்டு !"
" சார்...வந்து..." மென்று விழுங்கி?யவன் தொடர்நதான். " எனக்கு தீபாவளியை முன்னிட்டு லீவு வேண்டும் சார் !"
" தீபாவளி அன்னிக்குலீவுதானய்யா.."
" அதில்ல சார் ! எனக்கு இந்த வருஷம்
தலைதீபாவளி ! தீபாவளிக்கு முன் னால் ஒருநாளும் தீபாவளிக்கு மறு நாள் ஒரு நாளும் ஆக ரெண்டுநாள் லீவு வேணும் சார் !"
" எதுக்கய்யா ரெண்டுநாள் லீவு? "
" முதல் நாள் விட்டுப்போன ஐட்டங்கள்
பர்சேஸ் பண்ணனும். செய்யாரில் இருக்கற என் சிஸ்டர் வரச் சொல்லி யிருக்கா சார். தீபாவளி முடிஞ்சு மறு நாள் போக வேண்டியிருக்கு. அதுக்கு தான் லீவு வேணும் சார் !" தைரியமா கச் சொல்லி முடித்தான் வாசு .
வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டதுபோல் மேனேஜர் மனம் ஒரிஜினல் போக்குக்குத் திரும்பியது !
" ஏய்யா ! நீ சொல்ற விஷயங்கள தீபா
வளி அன்னிக்கே வைத்துக்கொள்ளக்
கூடாதா..யார் கிட்ட கதையளக்குறே !
இதோபார். ஆஃபீஸ்ல தலைக்குமேல
வேலை இருக்கு. தீபாவளி அன்னிக்கு
உன்னை வரச் சொல்லி போஸ்டிங் போடமுடியும். போனால் போகட்டும்னு விடறேன்...போய் ஆக வேண்டியதப் பாரு !" முகத்தில் அடித்தாற்போல் மேனேஜர் கறாராய் கூறிவிட முகத் தைத் தொங்கப்போட்டபடி தளர்வாய் திரும்பி நடந்தான் வாசு.
' படுபாவி ! இப்படி பண்ணிவிட் டானே ! நம்பி வந்தேன். கழுத்தை அறுத்துவிட்டான். உருப்பட மாட்டான் '
அப்பொழுது பியூன் அரக்க பரக்க உள்ளே நுழைந்து , " சார் ! தீபாவ ளிக்குபடம் ஹவுஸ் ஃபுல்லாம் ! எந்தத் தியேட்டர்லேயும் டிக்கட் கெடைக்க ல்ல..சாரி சார் !"
ஏமாற்றத்துடன் பியூன் திருப்பித் தந்த
பணத்தைப் பெற்றுக்கொண்டார் மேனேஜர். பியூன் அகன்றான் .
அனைத்தையும் பார்த்துக் கொண் டிருந்தவாசுவுக்கு கோபம் கோபமாக வந்தது. ஆஃபீஸ் , டியூட்டின்னு பேச றான். இவன்மட்டும் ஆஃபீஸ் நேரத்த தன் பர்சனல் மேட்டருக்கு செலவழி க்கிறான் ! டியூட்டிகான்ஷியஸோட செயல்படறதா நினைப்பு !'
சட்டென இன்னொரு எண்ணமும் எழுந்தது. அதைச் செயலாக்கும் பட்சத்தில் மேனேஜர் அருகில் சென் றான்.
" சார் ! தீபாவளி அன்னிக்கு எந்தப் படத்துக்கு சார் டிக்கட் வேணும் ?"
மேனேஜரின் சிடுமூஞ்சி மாறியது. சிரிப்பு மூஞ்சியாக ஆனது ! அந்த முக அழகை பரிபூர்ணமாக தரிசித்தான் வாசு. இனி இந்த சிரி மூஞ்சியை எப்போது காண்பேனோ...ஆஹா ! எத்தனை அழகு !'
" வாசு ! ' சர்க்கார் ' படத்துக்கு தீபாவளி
அன்னிக்கு மாலை ஷோவுக்கு நாலு
டிக்கட் வேணும். சத்யம் தியேட்டரா இருந்தால் செளகரியமா இருக்கும். முடியுமா ?" வாயெல்லாம் ஜொள்ளாக மேனேஜர் கெஞ்சுவது வேடிக்கை யாக இருந்தது. இருந்தும் வாசு அதை மானசீகமாக ரசித்தான்.குறு குறுவெ ன்று மேனைஜரையே சில வினாடி கள் பார்த்துக்கொண்டிருந்தான். மேனேஜரும் வாசுவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டி
ருந்தார். அவன் வாயிலிருந்து என்ன
வார்த்தை வரப்போகிறதோ என்கிற ஏக்கமும் அவர் முகத்தில் தெரிந்தது.
" சார் ! எனக்கு ஒன் அவர் பர்மிஷன் கொடுங்க. நான் போய் ட்ரை பண்ணி ப்பார்த்துட்டுச் சொல்றேன். " மேனே ஜரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு அகன்றான் வாசு.
சொன்னபடி டிக்கட் வாங்கி மேனேஜரிடம் தந்தான் வாசு.
" நீங்கள் கேட்டபடி சத்யம் தியேட்டரில்
தீபாவளி அன்னிக்கு ஈவினிங் ஷோவு
க்கு நாலு டிக்கட்..ரெண்டு பேருக்கு பக்கத்துப் பக்கத்தில சீட். மீதி ரெண் டும் ஸ்காட்டர்டா இருக்கும். பரவாயில்
லையா ?"
"நோ ப்ராப்ளம் வாசு ! பரவாயில்ல. நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். தாங்க்ஸ் வாசு !"
" இட்ஸ் ஓகே சார் ! " வாசு திரும்ப எத்த
னித்தபோது , " வாசு...." மேனேஜர் அழைக்க " சார் !" என்றான்.
" கிவ் மி உன் லீவு லெட்டர். "
வாசு தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து லீவு லெட்டரை எடுத்து அலட்சியமாக நீட்டினான். அதில் சாங்ஷண்டு என எழுதி கையொப்பமிட்டார் மேனேஜர்.
கடைக்கண்ணால் வாசு மேனேஜரின்
முகம் பார்க்க இன்னும் சிரி மூஞ்சி யாக இருந்தது முகம் !

வி.கே.லக்ஷ்மிநாராயணன்