சிதம்பரத்தில் கால்நடைகளுக்கு குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

சிதம்பரத்தில் கால்நடைகளுக்கு குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்



கடலூர், அக். 13–


சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கால்நடைகளுக்கான குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலையினை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் திறந்து வைத்து, தீபாவளி சிறப்பு பட்டாசு விற்பனையினை தொடங்கி வைத்தார்.


சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கமானது சிதம்பரம், புவனகிரி. காட்டுமன்னார்கோயில் மற்றும் ஸ்ரீமுஷ்ணம் தாலுக்காக்களை விவகார எல்லையாக கொண்டு இப்பகுதியைச் சேர்ந்த விவசாய பெருமக்களிடம் இருந்து விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வருகின்றது.


இ1348 சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்திற்கு சொந்தமான உளுந்து பதனிடும் ஆலையிலிருந்து கிடைக்கப்பெறும் உப பொருளான உளுத்தம் தவிடினை மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் பொருட்டு கூட்டுறவு பதனிடும் சங்கங்களில் பெறப்படும் உப பொருட்களை பயன்படுத்தி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.19.53 இலட்சம் மதிப்பீட்டில் கால்நடை குச்சி தீவனம் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.


இத்தொழிற்சாலையில் உளுத்தம் தவிடு, மக்கா சோளம், அரிசி தவிடு, கோதுமை தவிடு, சமையல் உப்பு, புண்ணாக்கு, வெல்லபாகு ஆகிய உபபொருள்களை கொண்டு தீவனம் தயாரிக்கப்படுகிறது. 50 கிலோ கால்நடை குச்சி தீவணம் தயாரிக்கும் ஆகும் செலவினம் ரூ.1100 ஆகும். கால்நடை குச்சி தீவணம் கிலோ ஒன்றின் விலை ரூ.25/- என நிர்ணயம் செய்து விற்பனை செய்யும் பட்சத்தில் கிலோ ஒன்றிற்கு ரூ.3 வீதம் 50 கிலோ அளவிற்கு ரூ.150/- இலாபம் ஈட்ட இயலும்.


ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் பொதுமக்களுக்கு தேவையான தரமான பட்டாசுகள் மற்றும் மத்தாப்புகள் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூட்டுறவு சங்கங்களில் மூலம் விற்கப்படும் பட்டாசுகளை வாங்கி பயன்படுத்துற வேண்டும் இதன் மூலம் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%