சிதறல்கள்

சிதறல்கள்

*பறவையின் எச்சம் //*

*அரச மரத்தில் அடைக்கலமானது //*

*வேப்பமரம் //*

---------------------------------------------------

*சுழன்ற சாட்டை //*

*ஒற்றைக் காலில் ஒய்யாரம் //*

*பம்பரம் //*

---------------------------------------------------

*அடங்கியது இதயம் //*

*அமரர் ஊர்தியில் பயணம் //*

*அணியவில்லை தலைக்கவசம் //*

---------------------------------------------------

*சுட்டெரிக்கும் சூரியன் //*

*விழிகளுக்கு விருந்து அளித்தது //*

*கானல் நீர் //*

---------------------------------------------------

*சிதறிய உணவு //*

*சித்திரமாக காட்சி அளிக்கிறது //*

*குழந்தையின் விரல்கள் //*

---------------------------------------------------

*கடும் குளிர் //*

*நடுக்கத்தை போக்க அழைக்கிறது //*

*தேநீர் கடை //*

---------------------------------------------------

*காகிதப் பூக்கள் //*

*இருந்தாலும் மணம் வீசுகிறது //*

*வண்ணங்கள் //*

---------------------------------------------------

*அணிவகுத்து நிற்கின்றன //*

*ஆயிரம் வினாக்களோடு பூமாலைகள் //*

*மணநாளுக்கா, மரணநாளுக்கா //*

---------------------------------------------------

*பா. செந்தில்குமார்*

*கோவை*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%