சின்னப்பாலம் பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு வார உறுதிமொழி

சின்னப்பாலம் பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு வார உறுதிமொழி



மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் புகையிலை விழிப்புணர்வு வாரம் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறையினரால் கொண்டாடப் படுகிறது.


இதன் ஒருபகுதியாக பாம்பன் சின்னப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புகையிலை விழிப்புணர்வு கூட்டம் தலைமையாசியர் செல்லம்மாள் தலைமையில் நடைப்பெற்றது.


ஆசிரியர் ஜெ.ஜே.லியோன் வரவேற்றுப் பேசினார்.


நிலைய சுகாதார ஆய்வாளர் சீனி மரைக்காயர் முன்னிலை வகித்தார்


புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் பயன்படுத்துவதால் வரும் தீமைகள் பற்றி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் விரிவாக விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்


அதனை தொடர்ந்து மாணவர்கள் புகையிலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


நிறைவாக, மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர் ரிம்சோன் நன்றி கூறினார்.


நிகழ்விற்கான ஏற்பாடுகளை மக்களைத் தேடி மருத்துவம் சுகாதார ஆய்வாளர்கள் ரிம்சோன், கரிகால சோழன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மிக்கேல் ராணி, ஞானசௌந்தரி, சந்திரமதி, லாரன்ஸ் எமல்டா, நான்சி, பிரிஸ்கிலா போன்றோர் செய்திருந்தனர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%