
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் பாராளுமன்றத்தில் திருத்தம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினரிடம் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை மனு........ திருவண்ணாமலை அக்டோபர்-8 நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு C. N. அண்ணாதுரை அவர்களை மாநிலத் தலைவர்திரு. சி.ஜெயக்குமார், அவர்கள், மாநிலத் துணைத் தலைவர் ஏ.முருகன், திருப்பத்தூர் மாவட்டத்தலைவர் திரு.தேசிங்கு ராஜன் திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் பொருளாளர் ஆர். விஜயகுமார், செய்தி தொடர்பாளர் டி.சிவக்குமார், தலைமை நிலைய செயலாளர் எஸ். சம்பத், துணைத் தலைவர் எம். ஜெயக்குமார், இணைச் செயலாளர் வி.அன்பு வேலன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர். மண்ணு,சுதாகர், அல்தாப் கான், வட்டத் தலைவர்கள் எஸ்.தனசேகர், எஸ். சக்திவேல் உள்ளிட்டோர் சந்தித்து 01. 09 2025 அன்று உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான தீர்ப்பு ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதால் நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து தமிழ்நாட்டில் இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2012ல் தான் அமல்படுத்தப்பட்டது என்பதால் ,அதற்கு முன்னர் பணியில் சேர்ந்த அனைத்து ஆசிரியர்களும் தொடர்ந்து பணியாற்றவும், பதவி உயர்வு பெறவும் உரிய திருத்தங்களை அச்சட்டத்தில் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி கடிதம் வழங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும்,தங்களின் தலைமை மற்றும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்புத்தீர்மானம் கொண்டுவர ஆவண செய்வதாக தெரிவித்தார்கள். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?