சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகம் எடுத்த ரயில்: புதிய உலக சாதனை

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. வேகம் எடுத்த ரயில்: புதிய உலக சாதனை


 

பெய்ஜிங்: சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘மேக்​னெடிக் லெவிடேஷன்' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 டன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை நடத்​தினர். இதில் வெறும் 2 விநாடிகளில் அந்த ரயில் மணிக்கு 700 கி.மீ. வேகத்தை எட்டி உலக சாதனை படைத்​தது.


400 மீட்​டர் (1,310 அடி) நீள​முள்ள காந்​தப்​புல ரயில் பாதை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டது, மேலும் 700 கி.மீ. வேகத்தை அடைந்த பிறகு ரயில் பாது​காப்​பாக நிறுத்​தப்​பட்​டது. இதன் மூலம் இது​வரை உரு​வாக்​கப்​பட்ட காந்​தப்​புல ரயில்​களில் அதிக வேகம் கொண்ட ரயில் என்ற பெரு​மையை இது பெற்​றது.


இந்த ரயில், தண்​ட​வாளங்​களைத் தொடா​மல், அதன் மேலே காந்த விசையில் செல்​லக்​கூடியது. இதன் முடுக்​கம் மிக​வும் சக்தி வாய்ந்​தது. ஒரு ராக்​கெட்டை ஏவும் அளவு சக்தி வாய்ந்​தது. இந்த வேகத்​தில் நீண்ட தொலை​வில் உள்ள நகரங்​களை சில நிமிடங்​களில் இந்த ரயில்​கள் மூலம் நாம் இணைக்க முடி​யும்.


இந்த சாதனையை படைத்த ஆராய்ச்​சி​யாளர்​கள் குழு கடந்த 10 ஆண்​டு​களாக இந்​தத் திட்​டத்​தில் பணி​யாற்றி வரு​கிறது.



2 நொடிகளில் 700 கிமீ வேகத்தை எட்டிய ரயில்.. மிரள வைத்த சீனா! கண்ணை மூடி திறப்பதற்குள் போயிடும்

 

பீஜிங்: சீனாவில் மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய புதிய மேக்லவ் தொழில்நுட்பத்தில் இயங்கும் ரயில் சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. வெறும் 2 வினாடிகளில் 700 கி.மீ வேகத்தை எட்டி இந்த ரயில் புதிய வரலாறு படைத்துள்ளது. வெறும் கண்ணால் பார்க்க முடியாத அளவிற்கு இந்த ரயிலின் வேகம் உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வாய் பிளக்க வைத்து வருகிறது.


தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் சீனா அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. சீனா 2050-ல் வாழ்கிறது என்று பலரும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடுவதை பார்க்க முடியும்.

 

அதாவது, சீனாவிற்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப்பயணிகள் அங்குள்ள வசதிகளைக் கண்டு அவ்வப்போது, அது தொடர்பாக வெளியிடும் வீடியோக்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மட்டும் இன்றி, போக்குவரத்திலும் சீனாவின் கட்டமைப்புகள் பிரமிக்க வைப்பதாக உள்ளது.



குறிப்பாக அந்நாட்டில் இயக்கப்படும் அதிவேக ரயில்கள் பற்றிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில்தான், 2 வினாடிகளில் 700 கி.மீட்டர் வேகத்தை எட்டும் ரயிலை சோதித்து பார்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.


எப்படி இந்த வேகம் சாத்தியம்

காந்த மிதப்பு தொழில்நுட்பம் (magnetic levitation) மூலம் இயங்கும் இந்த ரயில் மக்லேவ் ரயில் என்று அழைக்கப்படுகிறது. சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சோதனையை வெற்றிகரமாக முடித்து மிரட்டியுள்ளது. சுமார் 1 டன் எடை கொண்ட இந்த ரயில் வெறும் 2 நொடிகளில் 700 கி.மீ வேகத்தை எட்டியுள்ளது.


400 மீட்டர் தொலைவு கொண்ட டிராக்கில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால் போக்குவரத்து துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஹைப்பர் லூப்

ஹைப்பர் லூப் மற்றும் ஏரோ ஸ்பேஸ் போன்ற எதிர்கால திட்டமிடலுக்கும் சவால் கொடுக்கும் விதமாக இந்த மக்லேவ் ரயில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மக்லேவ் ரயில் சோதனையை நடத்திய இதே குழு கடந்த ஜனவரி மாதம் இதே டிராக்கில் 648 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் ரயிலை சோதித்து பார்த்தது.


 மேக்லவ் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் சீனா உள்ளதை இதுபோன்ற சோதனைகள் காட்டுவதாக அத்துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையை நடத்திய குழுவிற்கு தலைமை தாங்கிய பேராசிரியர் லி ஜியே கூறுகையில், "இந்த வெற்றி, சீனாவின் அதிவேக மக்லேவ் போக்குவரத்து மேம்பாட்டு தொழில்நுட்பத்தை மேலும் விரைவுபடுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.


கண்ணிமைக்கும் நேரத்திற்குள்

இந்த ரயிலுக்கு சூப்பர் கண்டக்டிங் காந்தங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால், உராய்வு இன்றி இவ்வளவு குறைந்த நேரத்தில் சூப்பர் ஹை ஸ்பீடை எட்ட முடிகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் கடந்து விடும் என்பதால், ரயில் சென்றதா? இல்லையா என்பதை உணர்வதற்குள் கண்ணுக்கு எட்டிய தூரத்தை கடந்து விடுமாம்.


எப்போது பயன்பாட்டுக்கு வரும்?

இந்த ரயில் இயங்கும் தொழில்நுட்பத்தை கொண்டு ராக்கெட்டுகளை கூட ஏவ முடியும் என்று கூறப்படுகிறது. இந்த ரயில் பயன்பாட்டுக்கு வந்தால், தொலைதூர நகரங்களுக்கு கூட சில நிமிடங்களில் சென்றுவிட முடியும்.

 

 விமான பயணத்திற்கு மாற்றாக குறைந்த நேரத்தில் பயணிகள் சென்றுவிட முடியும். எனினும், இந்த தொழில்நுட்பம் பல்வேறு கட்ட பரிசோதனைகளை கடக்க வேண்டியிருப்பதால், இது பயன்பாட்டுக்கு எப்போது வரும் என்று கணிக்க முடியாத நிலை இருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%