சீர்காழி அருகே காரைமேடு சித்தர்புரம் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு குருபூஜை விழா

சீர்காழி அருகே காரைமேடு சித்தர்புரம்    ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 8-ஆம் ஆண்டு குருபூஜை விழா



சீர்காழி , அக் , 05 -

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு சித்தர்புரம் 18 சித்தர்கள் பீடம் ஒளிலாயம் நிறுவனர் ஶ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 8 ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. உலக நன்மை வேண்டியும் , உலகத்தில் தானம் , தானியம் மற்றும் விவசாயம் அபிவிருத்தி வேண்டியும் ஸ்ரீ சிவசங்கர மஹேஸ்வர - மஹேஸ்வரி மஹா யாக வைபவம் நடைப்பெற்றது. 

விழாவிற்கு அதிமுக மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் 

எஸ்.பவுன்ராஜ் தலைமை தாங்கினார், ஏழை , எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட அவை தலைவர் பி.வி.பாரதி, மாநில அம்மா பேரவை துணை செயலாளர்  

இ. மார்கோனி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். ஏராளமான பெண்கள் பொதுமக்கள். பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அனைவருக்கும் மதிய உணவு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒளிலாய நிர்வாகிகள் நாடி.க.செல்வமுத்துகுமரன்., நாடி. ஆர் . செந்தமிழ், நாடி .ஆர் .மாமல்லன், நாடி ஆர்.பரதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%