சீர்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விளையாட்டு விழா
Sep 15 2025
44

சீர்காழி , செப் , 16 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியில் 18 ஆம் ஆண்டு விளையாட்டு விழா லலிதா
குழந்தை வேலு மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 9 மணி அளவில்
சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமல்ராஜ் ஒலிம்பிக் சுடரை ஏற்றி விழா துவங்கியது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த சீர்காழி டி.எஸ்.பி. அண்ணாதுரை
மாணவர்களுக்கு விளையாட்டின் முக்கியத்துவத்தை கூறினார். குட் சமாரிட்டன் பப்ளிக்
பள்ளியின் முதல்வர் பிரஜித் வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவிற்கு
விவேகானந்தா மற்றும் குட் சமாரிட்டன் கல்வி குழுமத்தின் தாளாளர் கே.வி.ராதாகிருஷ்ணன்,
செயலாளர் அனிதாராதாகிருஷ்ணன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார்கள். மேலும் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளியின் இயக்குநர்கள் பிரவீன் வசந்த் ஜெபஸ், அனுஷா மேரி ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக
அலெக்சாண்டர் ஹெப்ளின் ஏசாயா, ரீனிஷா பங்கு பெற்றார்கள்.
மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு 600 க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து பள்ளி ஒருங்கிணைப்பாளர்கள் சந்தோஷ் குமார், லூர்து
ஜாஸ்மின், ரூத் கிறிஸ்டியா ஆகியோர் நன்றியுரை ஆற்றினார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?