சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு பாராட்டு
Sep 13 2025
40

சீர்காழி, செப்,14 -
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி ஜே.யாழினி பாராட்டப்பட்டார். கடந்த 10-ம் தேதி நடைப்பெற்ற முதலமைச்சர் கோப்பை சக்கர நாற்காலி மேசை பந்து ஒற்றையர் பிரிவு மாற்றுத்திறனாளிக்கான பிரிவில் இப்பள்ளியின் சீர்காழியை சேர்ந்த மாணவி ஜே.யாழினி முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார். மேலும் பரிசாக
காசோலை ரூ 3000 ஆயிரம் வழங்கப்பட்டது. மாநில அளவிலான
மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில்மயிலாடுதுறை மாவட்டம் சார்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாதனை படைத்த மாணவியை பள்ளி தாளாளர் கே.வி. ராதாகிருஷ்ணன்,பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் ஆகியோர் பாராட்டினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?