சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு

சுவாச நோய்களுக்கு மருந்து: இந்தியாவில் கண்டுபிடிப்பு



புதுடெல்லி: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஜிதேந்திர சிங் நேற்று கூறியதாவது:


இந்தியாவில் முதல் முறையாக ‘நபித்ரோமைசின்’ என்ற பெயரில் ஆன்டிபயாட்டிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுவாச நோய்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, புற்று நோயாளிகள் மற்றும் கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.


இந்த ஆன்டிபயாட்டிக் மருந்து முழுமையாக இந்தியாவில் உருவாக்கப்பட்டு, வடிவமைக்கப்பட்டு, மருத்துவ ரீதியாகச் சோதிக்கப்பட்ட முதல் மூலக்கூறாகும். இது மருந்துத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்றம் ஆகும்.


இந்தியா இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித ஜீனோம்களை வரிசைப்படுத்தி உள்ளது. இந்த கண்டுபிடிப்பு ‘நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%