சுவிட்சர்லாந்து மதுபான விடுதி தீ விபத்து: பலி எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு

சுவிட்சர்லாந்து மதுபான விடுதி தீ விபத்து: பலி எண்ணிக்கை 47ஆக அதிகரிப்பு


சூரிச், ஜன.


சுவிட்சர்லாந்தில் சொகுசு விடுதி ஒன்றில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மதுபான பாரில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.


சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கிரான்ஸ் – மோன்டானா பனிச்சறுக்கு விளையாட்டுகள் மற்றும் அது சார்ந்த சொகுசு விடுதிகளுக்கு பெயர் போனது. இங்கு உள்ள சொகுசு விடுதியில் நேற்று முன்தினம் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் சுவிட்சர்லாந்து மட்டுமின்றி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


மதுபான விருந்து, ஆடல், பாடல் என நிகழ்ச்சி களைகட்டியது. அப்போது திடீரென சொகுசு விடுதியின் மதுபான பாரில் தீ பற்றியது. இந்த தீ சில நிமிடங்களில் விடுதி முழுதும் பரவியது. மக்கள் பலர் அலறியடித்து வெளியேறினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தீ விபத்தில் படுகாயம் அடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. தீ பற்றிய போது அடுத்தடுத்துகுண்டுவெடிக்கும் சத்தம் கேட்டதால், முதலில் இது பயங்கரவாத தாக்குதல் என்ற அச்சம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் பயங்கரவாத தாக்குதல் இல்லை என்பது உறுதியானது.


அதிகாரிகள் தங்கள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தையும் மீட்கப்பட்ட ஆதாரங்களையும் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், விரைவில் விபத்துக்கான காரணங்கள் குறித்து தெரிய வரும்.


இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று சுவிட்சர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%