செக்கிழுத்த தியாகச் செம்மல் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. 154 வது பிறந்த நாள் விழா - அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
Sep 05 2025
12

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. 154 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சைவ வேளாளர் சங்கத்தில் உள்ள வ.உ.சி. அவர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, கடம்பூர் செ.ராஜூ ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, அதிமுக நிர்வாகிகள் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், நகர்மன்ற உறுப்பினர் செண்பக மூர்த்தி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆனந்த பாஸ்கர் செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர் - ராஜ்குமார்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?