
சென்னை, செப்.23-
சென்னை மாநகரின் பொதுப் போக்குவரத்து வசதிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் விதமாக #ChennaiOneApp-ன் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் மாநகரப் பேருந்து - சென்னை மெட்ரோ - புறநகர் ரயில் சேவை - ஆட்டோ - கேப் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகளை Chennai One செயலியின் மூலம் ஒரே QR Code பயணச்சீட்டின் வழியே பெற்றிட முடியும். நெரிசல் - வரிசை தவிர்த்து பயணங்களை எளிதாக்கிடும் இந்த ஒருங்கிணைந்த பொதுப்போக்குவரத்து சேவைக்கான Chennai One App-ஐ அனைத்துத் தரப்பினரும் பயன்படுத்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%