சென்னையில் மீண்டும் மாடிபஸ் சேவை துவக்கம்

சென்னையில் மீண்டும் மாடிபஸ் சேவை துவக்கம்


சென்னை, ஜன.13- 

சென்னையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு மாடி பஸ் சேவையை முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். ரூ.1.89 கோடி மதிப்புள்ள இந்த ஈரடுக்கு பேருந்தை தமிழ்நாடு அரசுக்கு அயலகத் தமிழர்கள் பரிசாக வழங்கி உள்ளனர். இந்த பேருந்தில் ஏறி அதில் உள்ள வசதிகளை முதல்வர் பார்வையிட்டார்.

 முதல் கட்டமாக சென்னையில் முன்மொழியப்பட்ட சுற்றுலா வழித்தடத்தின்படி டிடிடிசி தலைமையகம், எல்ஐசி, ஸ்பென்சர் பிளாசா, மக்கா மஸ்ஜித், பிஆர் அன்சன்ஸ், பல்லவன் சாலை, பாடிகார்டு முனீஸ்வரர் கோவில், ராஜா அண்ணாமலை மன்றம், சென்னை உயர்நீதிமன்றம், தலைமைச் செயலகம், ரிசர்வ் வங்கி.சென்னை துறைமுகம், வெற்றி போர்நினைவுச் சின்னம்,நேப்பியர் பாலம், அண்ணா, கலைஞர, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்கள், மெரினா கடற்கரை, கலங்கரை விளக்கம், டிஜிபி அலுவலகம், ராணிமேரி கல்லூரி,பிரசிடென்சி கல்லூரி, எழிலகம், சென்னை பல்கலைக்கழகம், தூர்தர்ஷன் கேந்திரா, ராஜாஜி மண்டபம், ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, டிடிடிசி தலைமையகம் ஆகிய வழித்தடங்கலில் நகரின் முக்கிய சுற்றுலா மற்றும் பாரம்பரிய இடங்களை முழுமையாக காணும் வகையில் பனோரமிக் பார்வை வசதியுடன் இந்த பேருந்து சேவை இயக்கப்பட உள்ளது.

 இதில் அமைச்சர்கள் ராஜேந்திரன், நாசர்,ராஜா, தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%