சென்னை-நெல்லை வந்தே பாரத்ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைப்பு
Sep 16 2025
55

சென்னை, செப்.17-
சென்னை - நெல்லை இடையே பகல் நேரத்தில் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. நெல்லையில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் மதியம் 1.50 சென்னை எழும்பூரை வந்தடைகிறது. மறுமார்க்கத்தில், சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 10.40 மணிக்கு நெல்லையை சென்றடைகிறது.
பயணிகளின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்த ரயில், தற்போது, 16 பெட்டிகள் உள்ளன. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று வரும் 24-ம் தேதி முதல் மேலும் 4 பெட்டிகள், அதாவது 20 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இதனால், கூடுதலாக 312 பேர் பயணிக்க முடியும். இதன் மூலம் ஒரே நேரத்தில், 1,440 பயணிகள் வந்தே பாரத் ரெயிலில் செல்லலாம். இதில், 18 சேர் கார் பெட்டிகளும், 2 எக்சிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் அடங்கும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?