சென்று வா தோழனாக பழகிய 2025
சில கனவுகளை நினைவாக்கி நீ தங்கிவிட்டாய்,
மகிழ்ச்சியை தந்து பரவசத்தில் ஆழ்த்தினாய்
கற்ற பாடங்கள் நல்வழியே காட்டின..
விளக்கில் திரியாய் ஒளிர்ந்தாய்,
மன உறுதியுடன் வாழ்ந்தாலே வெற்றி என உறுதிப்படுத்தினாய்
வந்த கனவுகள் சில நனவான தருணங்கள் ஆனது,
சில கனவுகள் நாளைய நம்பிக்கையாய் காத்திருக்கும்.
நேரம் கற்றுத்தரும் ஆசானாய் வந்தது
ஏற்றம் தரும் பாடல்களை காதுகளில் ஒலிக்கச் செய்தாய்
நன்றி சொல்லி உன்னை வழி அனுப்புகிறேன்
புதிய ஆண்டினை வரவேற்கும் கதவாய் நீ அமைந்தாய்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2026
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%