மனித புத்தியின் விதையிலே முளைத்த அறிவுதான் செயற்கை நுண்ணறிவு.
இயந்திரத்தையே உயிர் பெற்ற மனிதனாக மாற்றவும்,
எண்களின் மொழியில் உலகை அலசி சில
நொடிகளில் முடிவெடுக்கும் துல்லிய தொழில்நுட்பம்.
கேள்விக்கு விடையாய் சட்டென்று கற்றுக் கொண்டு
தவறுகளில் இருந்து தன்னையே செம்மைப்படுத்தும் திறன் அதற்குண்டு.
காலத்தின் வேகத்தை இரட்டிப்பாக்கும் சக்தி
உழைப்புக்கு துணையாய் நிற்கும் அறிவாற்றல்.
கல்வி, மருத்துவம் என பல துறையில் வெற்றிக்கு வழிகோலும்.
செயற்கை நுண்ணறிவையும் தற்போது நூறு விழுக்காடு சரி என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில் தான் உள்ளது என்கின்றனர் வல்லுநர்கள்.
நன்மை அறிந்து பொறுப்புடன் செயல்பட்டால் மனித எதிர்காலம் ஒளிமயமாய் மலர
வழிவகுக்கும்.

அன்புடன்
உ.மு.ந.ராசன்கலாமணி
கோவை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?