செய்யாறில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 6 வது வார திருக்குறள் திருப்பணி பயிற்சி வகுப்பு:
Nov 15 2025
11
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆறாவது வார திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் ஆறாவது வார திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜி .ஜெயகாந்தன் தலைமை தாங்கி, பயிற்சியினை துவக்கி வைத்து, குழந்தைகள் தின விழா குறித்து பேசினார்.
பயிற்சியாளர் புலவர் ந. கனகசபை முன்னிலை வகித்தார். பயிற்சியாளர் கவிஞர் எறும்பூர் கை. செல்வகுமார் வரவேற்று பேசினார். முதுகலை தமிழாசிரியர் ஆர் . தமிழ்த் தேனி, தலைமையாசிரியர் ஆர் .தேன்மொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு குழந்தைகள் தின விழா குறித்தும் பேசினர்.
பின்னர் பயிற்சி மாணவர்களுக்கு வழக்கமாக பிஸ்கட் ,தேனீர் வழங்கப்பட்டாலும் குழந்தைகள் தின விழா முன்னிட்டு நேற்று எள் உருண்டை, எலுமிச்சை மிட்டாய் கூடுதலாக வழங்கப்பட்டது . இரண்டாம் கட்டமாக புதிதாக வந்த 15 மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
பயிற்சி வகுப்பில் 42 மாணவ மாணவியர் ,ஆசிரியர்கள் 4 பேர், பெற்றோர் 4 பேர் உள்ளிட்ட 50 பேர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?