தனி வட்டாட்சியர் எல்.பாஸ்கர் , பேராசிரியர் கு.கண்ணன் ஆகியோர் பங்கேற்பு.
செய்யாறு செப் .22,
செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கத்தின் முப்பெரும் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்ட முத்தமிழ் சங்கம் சார்பில் தந்தைபெரியார் ,அறிஞர் அண்ணா ஆகியோரின் திருவுருவ படங்கள் திறப்பு விழா ,ஆசிரியர் தின விழா முன்னிட்டு உரையரங்கம் கவிதை வாசிப்பு ,விருது பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக பாரதி மழலையர் பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் டாக்டர் எறும்பூர் கை. செல்வகுமார் தலைமை தாங்கினார். நெறியாளர் புலவர் மெய். பூங்கோதை, கருத்தாளர் புலவர் ந. கனகசபை ,ஆகியோர் முன்னிலை வகித்தனர் .செயலாளர் ம.பழனி வரவேற்றார் .தமிழக அரசு விருது பெற்ற ஆசிரியர்கள் எச். முபாரக், நா.சண்முகம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
உரையரங்கத்தில் முதுகலை ஆசிரியர் எஸ். பாரதி ,தலைமை ஆசிரியர் ஆர். தேன்மொழி, ஆகியோர் பேசினர். கவியரங்கத்தில் த. வே .விக்ரமாதித்தன் ஆர். தமிழ்த்தேனி, எம். சுந்தரமூர்த்தி ஆகியோர் கவிதை வாசித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி தமிழ் துறை தலைவர் கு.கண்ணன் பேசினார் .பின்னர் முதன்மை விருந்தினர் வட்டாட்சியர் எல். பாஸ்கர் பாராட்டு சான்றுகள் வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை துணை செயலாளர் ஜே. பாபு தொகுத்து வழங்கினார். நிகழ்வில் துணைத் தலைவர்கள் எம். சண்முகம்,ஏ. சுந்தர், எஸ் .மோதிலால் ,பி .எம். சதீஷ்குமார்,செயற்குழு உறுப்பினர் குமர குருபாலன், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட செயலாளர் இடி மின்னல் இனியவன், பேராசிரியர் வெங்கடேசன், ஆராய்ச்சி மாணவி புவனேஸ்வரி உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர் .முடிவில் பொருளாளர் க. கோவேந்தன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?