பெங்களூர்,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சுவர்ண விதான சவுதா அருகே ஹலகா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1,452 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான குழந்தைகள் செல்போன்களில் மூழ்கிய வண்ணம் இருப்பதோடு, பொதுமக்கள் பெரும்பாலும் டி.வி. பார்ப்பதில் அதிக கவனம் செலுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் இந்த செயல்களை கவனித்த அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி ஜெகபதி மாணவர்களிடம் படிப்பை ஊக்குவிக்கும் வகையில் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அப்போது அவருக்கு மகாராஷ்டிரா மாநிலம் சாங்லி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், கிராம மக்கள் தினமும் 2 மணி நேரம் செல்போன் மற்றும் டி.வி. பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே அதே போன்று தனது கிராமத்திலும் செய்ய வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
அதன்படி கிராம மக்களை அழைத்து இது குறித்து தெரிவித்தார். பொதுமக்களும் இதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். அதன்படி கிராம பஞ்சாயத்து அலுவலகம் அருகே ஒரு சைரன் அமைத்தனர். அந்த சைரன் தினமும் இரவு 7 மணிக்கு ஒலிக்க தொடங்கியதும், கிராமத்தில் உள்ள அனைவரும் இரவு 9 மணி வரை மொத்தம் 2 மணி நேரம் செல்போன், டி.வியை அணைத்து விடுகிறார்கள். இதுபோன்ற ஒரு நல்ல முயற்சிக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?