சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மருத்துவ கருவிகள் அமைச்சர் இரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மருத்துவ கருவிகள் அமைச்சர் இரா.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்

சேலம், ஜூலை 17–


சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடலியல் மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறைக்கு ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மருத்துவ பரிசோதனை கருவிகளை கலெக்டர் இரா.பிருந்தாதேவி, முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தொடங்கி வைத்தார்கள். பின்னர் அவர் தெரிவித்ததாவது:–


தமிழ்நாடு முதலமைச்சர் கல்வியும், மருத்துவமும் இரண்டு கண்களாக கருதி அதீத முக்கியதுவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வருகை தரும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய கட்டடங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள்.


அந்த வகையில் உடலியல் மருத்துவம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுத் துறையில், இரண்டு புதிய மருத்துவ சோதனை கருவிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மேம்பட்ட என்சிஎஸ்–இஎம்ஜி நரம்பியல் மின்னழுத்தப் பரிசோதனை கருவியானது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாட்டை பரிசோதிக்க உதவுகிறது.


அதே போன்று ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் எம்எஸ்கே யுஎஸ்ஜி: மஸ்க்ளோஸ்கலேட்டல் அல்ட்ரா சவுண்ட் கருவியானது தசைகள், மூட்டுகள், தண்டு, பொருத்திகள் போன்றவை எப்படி செயல்படுகின்றன என்பதை அல்ட்ராசவுண்ட் மூலம் பார்க்க உதவுகிறது. இந்த அதி நவீன இயந்திரம் கொண்டு உள்ளுறுப்புகள் மட்டுமன்றி, தசை, மூட்டு பகுதி, சவ்வு ஆகியன பற்றியும் அவற்றின் இயக்கம் பற்றியும் ப‌ரிசோதனை செ‌ய்து, ஆரம்ப நிலையிலேயே நோய் கண்டறியவும், சிகிச்சை செய்யவும் பயன்படுகிறது. இவ்வாறு அமைச்சர் இரா.ராஜேந்திரன் தெரிவித்தார்.


முன்னதாக முதலமைச்சரால் கடந்த ஜூன் மாதம் 12 அன்று சேலம் வருகையின் போது சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.7 கோடி மதிப்பீட்டில் புதிய புற்றுநோய் வளாக கட்டடம், ரூ.22.97 கோடி மதிப்பீட்டில் உயர் துல்லிய கதிர்வீச்சு சிகிச்சை வழங்கும் லீனியர் அக்செல்லரேட்டர் கருவி, ரூ.4 கோடி மதிப்பீட்டில் உள்ளக கதிர்வீச்சு சிகிச்சை வழங்கும் எச்பிடி பிராச்சி தெரபி கருவி மற்றும் ரூ.4 கோடி மதிப்பீட்டில் நோயினை துல்லியமாக இடம் கண்டறியும் சிடி சிம்முலேட்டர் கருவி என மொத்தம் ரூ.34.67 கோடி மதிப்பீட்டில் திறந்து வைக்கப்பட்டது.


மேற்குறிப்பிட்டுள்ள வளாக கட்டடம் மற்றும் பல்வேறு கருவிகளின் பயன்பாடுகள் குறித்து அமைச்சர் இரா.ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்கள்.


இந்நிகழ்வின்போது மருத்துவமனை முதல்வர் தேவிமீனா, உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%