சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணம்

சேலம் சிறை தியாகிகள் நினைவு ஜோதி பயணம்



ராணிப்பேட்டை, நவ. 4 - பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்க, தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகள் ரத்து செய்யக்கோரி இந்திய தொழிற்சங்கமையம் 16 வது மாநில மாநாட்டிற்கு சேலம் மத்திய சிறையில் திங்களன்று (நவ. 4) புறப்பட்ட ஜோதி பயணத்திற்கு செவ்வாயன்று (நவ. 4) மாவட்ட செயலாளர் ஆ. தவராஜ் தலைமையில் முத்துக்கடைபேருந்து நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 


இதில் மாநில செயலாளர் சி. நாகராஜன், வி.ச மாநில செயலாளர் இரா. சரவணன், சிஐடியு கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் என். ஸ்ரீதர், வேலூர் மாவட்ட செயலாளர் எஸ். பரசுராமன், திருவண்ணாமலை முரளி, விதொச மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, வி.ச மாவட்ட தலைவர் எஸ். கிட்டு, செயலாளர் எல்.சி. மணி, ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் கேகேவி. பாபு, செயலாளர் பி. மணி, மின்சாரம் மாவட்ட தலைவர் காமராஜ், சத்துணவு மு. மாநில செயலாளர் எஸ். முரளிதாஸ், போக்குவரத்து மண்டல தலைவர் கே. ரவிச்சந்திரன், கட்டுமானம் மாவட்ட செயலாளர் த.ஞானமுருகன்,  பழனியப்பன், சேலம் மாவட்ட பொருளாளர் வி. இளங்கோவன், சேலம் மாவட்ட சாலை போக்குவரத்து மாவட்ட செயலாளர் பி. முருகன் உள்ளிட்டோர் பேசினார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் என். ரமேஷ் நன்றி கூறி முடித்து வைத்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%