ஜிபே 10 ரூபாய்

ஜிபே 10 ரூபாய்



 அன்றைக்குக் காலையில் தாமதமாகத்தான் எழுந்தான் ராகவன். எழுந்தவுடன் காத்திருந்ததுபோலக் கைப்பேசி ஒலித்தது. எடுத்தான். சின்ன அண்ணன் மாணிக்கம்.

 அழைப்பை உயிர்ப்பித்து எடுத்து காதில் வைத்து சொல்லுங்கண்ணே என்றான்.

 மறுமுனையில் ராகவா.. நேற்று நீ எவ்வளவு கொடுத்தே? மொத்தம் எவ்வளவு? என்றார்.

 பதினாறாயிரத்து எண்ணூறுண்ணே என்றான் ராகன்.

 சரி.. இப்ப உன்னோட ஜிபேக்குப் பணம் அனுப்புறேன். பாரு என்றார். சரிங்கண்ணே.. என்றான்.

 சற்றுநேரத்தில் பணம் வந்தமைக்கான சிற்றொலி கேட்டது. எடுத்துப் பார்த்தான். மாணிக்கம் அண்ணன். 10 ரூபாய் அனுப்பியிருந்தார். அதைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மாணிக்கம் அண்ணன் அழைத்தார்.

 சொல்லுங்கண்ணே..

 உன்னோட எண்ணுக்கு வெறும் பத்து ரூபாய் அனுப்பியிருக்கேன். சரியா உனக்குத்தான் வந்திருக்கான்னு சரிபார்க்க.. வந்துடுச்சா பாரு..

 பார்த்தான். வந்திருந்தது. வந்துவிட்டது என்று மறுபடியும் அழைத்துச் சொன்னான் ராகவன்.

 எதிர்முனையில் மாணிக்கம் அண்ணன் சொன்னார்.. உனக்கு இப்போ மொத்தப் பணத்தையும் அனுப்புறேன் வந்துடுச்சான்னு பாரு.. என்றார்.. 

 அனுப்பிவிட்டார் சற்று நேரத்தில் வந்துவிட்டது என்று.

 செலவு செய்தது பதினாறாயிரத்து எண்ணூறு ரூபாய்தான். ஆனால் கூடுதலாகப் பத்து ரூபாய் அனுப்பியிருந்தார். 

 உடனே ராகவன் திருப்பி அந்தப் பத்து ரூபாய் கூடுதல் தொகையைத் திருப்பி மாணிக்கம் அண்ணனுக்கு அனுப்பிவைத்தான்.

 உடனே அழைத்தார் மாணிக்கம்.

 என்னப்பா ராகவா பத்து ரூபாய் அனுப்பியிருக்கே?

 அண்ணே.. இந்தக் கணக்கு சித்தி இறந்துபோன கணக்கு. சித்தப்பா நம்பகிட்ட கொடுத்தப் பணத்திற்கான கணக்கு. தவிரவும் இதுபோல தெரியாத கணக்கிற்கு அனுப்பும்போது வழக்கமாக பெரும்பாலும் 1 ரூபாய்தான் அனுப்புவார்கள். நீங்கள் 10 ரூபாய் அனுப்பிள்ளீர்கள். இந்த 10 ரூபாயைக் கழிக்கவுமில்லை.. கூடுதலான தொகை இது. ஒவ்வொரு ரூபாயையும் நம்மை மாதிரியுள்ளவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்துதான் சம்பாதிக்கிறோம்.. உங்களோட பெருந்தன்மை 10 ரூபாய் தம்பிங்கற உரிமையில அனுப்பினீங்க.. ஆனா எனக்கு கணக்கு விஷயத்தில் சரியாக இருக்கவேண்டும். 10 ரூபாய் நமக்குப் பெரிய தொகைதான். ஒருவருக்கொருவர் செலவு செய்வது வேறுண்ணே.. கூடுதல் பணம் வேண்டாம்னு திருப்பி அனுப்பிவிட்டேன்.. என்றான்.

 

ஹரணி,

தஞ்சாவூர்-2

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%