ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்

ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடி நாளை தென்ஆப்பிரிக்கா பயணம்


 

புதுடெல்லி,


ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் வருகிற 22 மற்றும் 23-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை (வெள்ளிக்கிழமை) தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.


உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது. மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.


அத்துடன் இந்தியா-பிரேசில்-தென் ஆப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


முன்னதாக இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து இருந்தார். தென் ஆப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்களை கண்டித்து இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%