ஜெயச்சந்திரன் நகர் பிரதான சாலையில் குழந்தை வளர்ப்பு , சிறார் பாலியல் வன்கொடுமை , பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

ஜெயச்சந்திரன் நகர் பிரதான சாலையில் குழந்தை வளர்ப்பு , சிறார் பாலியல் வன்கொடுமை , பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி

செய்தி : சென்னை பள்ளிக்கரணை யுரோகீட்ஸ் மழலையர் ஆங்கிலப்பள்ளி அமைப்பினர் ஜெயச்சந்திரன் நகர் பிரதான சாலையில் குழந்தை வளர்ப்பு , சிறார் பாலியல் வன்கொடுமை , பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் . பயிலும் குழந்தைகள் தங்களது சிறிய சைக்கிளில் பதாதைகள் கொண்டு ஊர்வலமாக உடன் பெற்றோர்களும் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது . பேரணியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பெற்றோர்கள் என கலந்துகொண்டு முதலாவது மற்றும் நான்காவது பிரதான சாலைகளில் ஊர்வலமாக சென்றனர் . பள்ளி நிர்வாகிகள் பெற்றோர்கள் இணைந்து ஊர்வலத்தை தொடங்கிவைக்க பள்ளிக்கரணை காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு ஊர்வலம் நடந்தது . தொடக்கத்தில் பெற்றோர்கள் , காவல் துறை அதிகாரிகள் இந்த ஊர்வலத்தின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு குறித்தும் பேசினர். பள்ளி நிர்வாகத்தினர் , ஆசிரியைகள் , தலைமை ஆசிரியை ஆகியோர் விரிவான ஏற்பாடுகள் செய்திருந்தனர் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%