" பெண் என்ன ஜாதிடா?" மகனைக் கேட்டார் சபேசன்.தயங்கித் தயங்கி சொன்னான் திவாகர்.
" நம்ம ஜாதி இல்லப்பா !"
" அப்படின்னா....?"
" இப்போதைக்கு அவ்வளவுதான் சொல்லமுடியும் !"
" ஸோ நீ முடிவே பண்ணிட்டே ?" தன் மீசையை முறுக்கியபடி கேட்டார்.
" ஸாரிப்பா ! உங்கள் அனுமதியோடு சிவகாமியோட கழுத்துல தாலிகட்ட ஆசைப்படறேன்ப்பா !"
" அனுமதி மறுத்தால்....."
" மறுபடியும் ஸாரி ! என் வழியிலேயே
போய்க்கிட்டிருப்பேன் "
" அவ்வளவு தூரம் வந்தபிறகு உனக்கு
இந்த வீட்டில இடம் கிடையாது. நீ கிளம்பலாம்."
" என்னங்க !" என ஓடிவந்த மனை வியைதடுத்து நிறுத்தினார் சபேசன்.
" நீ பேசாமல் உள்ளே போ ! பயலுக்கு
புத்தி வரணும். அதுக்கு இதைத்தவிர
வேறவழி எனக்குத் தெரியல்ல !"
போட்டுக்கொண்டிருக்கும் பேன்ட் ஷர்ட்டோடு கனத்த இதயத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினான் திவாகர்.
' நம்ம ரெண்டுபேர் வீட்டிலும்.நம் காத
லுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்றால் நாளை நாம் இருவரும் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டியது ' என்று நேற்று மாலை திவாகரும் சிவகாமியும் முடிவு எடுத்திருந்தனர். திவாகர் எதிர்பா ர்த்தது போலவே சிவகாமி கடற்க ரையில் காத்துக்கொண்டி ருந் தாள்.அவள் வீட்டிலும் காதலுக்கு
எதிர்ப்பு என்று நினைத்தான்.
விரைவாய் அவளருகில் சென்று நின்
றவன் , " ஸாரி சிவகாமி ! எங்கப்பா நம் காதலுக்கு ஒத்துக்கொள்ளவி ல்லை. அதனால் வீட்டைவிட்டு வெளி யேறி வந்திட்டேன். உன் வீட்டில் என்ன சொன்னாங்க ? " என்றான் ஆர்வமு டன்.
" நானும் பர்மிஷன் கிடைக்காதுன்னு
தான் பயந்துக்கிட்டிருந்தேன். ஆனால்
நான் பயந்தமாதிரி அப்படி எதுவும் நடக்கல்ல. என் பேரண்ட்ஸ் நம்ம கல்யாணத்துக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க ! " என்றாள் சிவகாமி.
" அப்படியா...ஆச்சரியமாயிருக்கே ! எப்படி இது சாத்தியமாச்சு சிவகாமி ? ஏன்னா நீ பர்மிஷன் கிடைக்காது. அத
னால் கடல்ல விழுந்துசாகலாம்னு நேத்து ஐடியா கொடுத்தே. ஆனால் இன்னிக்கு பாஸிடிவா சொல்றே ! ரியலி ஓண்டர்ஃபுல் !"
" அதுல ஒரு லாஜிக் இருக்கு திவா கர் !"
" என்ன அது ?"
" எங்கம்மாவும் அப்பாவும் வேற வேற
ஜாதி ! அதனால ஒத்துக்கிட்டாங்க. நம்ம விஷயத்த ஒரு ரிவால்யூ ஷனா நினைச்சு சரின்னுட்டாங்க ! "
" சரி. இப்போ நான் வீட்டவிட்டு வெளியே வந்திட்டேன். நீ ஜாலியா உன் வீட்டுக்குப் போயிடுவே நான் எங்கே போறது ?"
" நீ எங்கேயும் போகவேண்டாம்பா ! நம் வீட்டுக்கே வந்துடு ! " தந்தையின் குரல் பின்புறம் ஒலிக்க பிரமிப்பு கலந்த சந்தோஷத்துடன் திரும்பி னான் திவாகர்.
" என்னப்பா உன் அப்பாவின் மனசு திடீர்னு மாறிப்போச்சேன்னு ஆச்சரி யப்படறயா !" என்ற சபேசன் தொட ர்ந்தார்.
" ஏண்டா வேதகிரியோட மகள் சிவகாமியைத்தான் நீ விரும்ப றேன்னு சொல்லக் கூடாது ! "
திவாகர் திரூ திருவென்று விழித் தான்.
" வேதகிரி என் நண்பர் என்பது உனக்குத் தெரியாது. ஏன்னா கடந்த மூணுமாசமாகத்தான் வேகிரியோட மகளோடு நீ பழகறே. அவர் என்னை மொபைல்ல தொடர்பு கொண்டு விலாவரியாச் சொன்னார்அதாவது நீயும் அவர் மகளும் உயிருக்கு
யிராக பழகுவதாகவும் அதுக்கு நாம் ஏன்தடையாய் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் கூறுவது நியாயம்னு பட்டது. அப்போ தான் நீயும் சிவகாமியும் கடற்க ரையில சந்திக்கப் போறீங்கன்னு சொன்னார். நானும் வந்தேன்.
உங்களையும் பார்த்துவிட்டேன். சரி
வீட்டுக்குப் புறப்படு. அம்மா மரும களே ! ஸாரி...மருமகளா வரப்போகி றவளே ! கிளம்பு. கார் கொண்டு வந்திருக்கேன். உன்னை வீட்டில டிராப் பண்ணறேன் !" திவாகரும் சிவகாமியும் மிகுந்த மகிழ்ச்
சியுடன் காரில் ஏறிக்கொண்டனர் !

--வி.கே.லக்ஷ்மிநாராயணன்