டிஜிட்டல் கைது என மிரட்டி முதியவரிடம் ரூ.4.15 கோடி பறிப்பு: உத்தரப் பிரதேச இளைஞர் கைது
Nov 03 2025
14
மணீஷ்குமார்
சென்னை: மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஸ்ரீவத்ஸன் (73). சென்னை அண்ணா சாலையில் உள்ள பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவருக்கு கடந்த மாதம் 26-ம் தேதி வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர் தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகம் செய்து கொண்டு, உங்களது பெயரில் பெறப்பட்ட சிம் கார்டு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் நீங்கள் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டு மானால் உங்களது வங்கியில் உள்ள பணம் முழுவதையும் நான் சொல்லும் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் மீது குற்றம் இல்லை என தெரியவந்தால், உடனே பணம் முழுவதும் உங்கள் வங்கிக் கணக்குக்கே மீண்டும் அனுப்பி வைக்கப்படும்.
இல்லையென்றால் உங்களை கைது செய்வோம் என மிரட்டினார். பயந்துபோன ஸ்ரீவத்ஸன் அவர் தெரிவித்தபடி பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு ரூ.4.15 கோடி அனுப்பி வைத்தார். அதன் பிறகு அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீவத்ஸன் இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
போலீஸ் அதிகாரி எனக் கூறி பணம் பறித்தது உத்தரப்பிரதேச மாநிலம், ஜான்சி மாவட்டம், மவுரானிப்பூரைச் சேர்ந்த மணீஷ்குமார் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீஸார் மணீஷ்குமாரை கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?