டிட்வா புயல் காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பம் பதிவு

டிட்வா புயல் காரணமாக 100 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வெப்பம் பதிவு


 

திருநெல்வேலி: தென் மாவட்டங்களை நடுங்கவைக்கும் வகையில் நேற்று கடுமையான குளிர் பதிவாகி உள்ளது. மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பகலிலேயே ஊட்டி, கொடைக்கானலை ஒத்த குளிர் நிலவியது.


திருநெல்வேலியில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நேற்று 22 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது. டிசம்பர் - ஜனவரி மாதங்களிலும் இதுபோன்ற பகல் நேர குளிர் இதற்கு முன் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மதுரையில் 22.6 டிகிரி வெப்பநிலை பதிவாகி புதிய சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு 24 டிகிரி வெப்பநிலை மட்டுமே பதிவாகியிருந்தது.


தூத்துக்குடியில் நேற்று 20.5 டிகிரி வெப்பநிலை பதிவு செய்யப்பட்டு, 2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட 25.5 டிகிரி சாதனையை முறியடித்துள்ளது.


கோவில்பட்டி 21.8, தென்காசி 21, திருச்செந்தூர் 20, பாம்பன் 23, கன்னியாகுமரி 26.6 என தென் மாவட்டங்கள் முழுவதும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குளிர் பதிவாகியுள்ளது. இத்தகவலை தன்னார்வ வானிலை ஆய்வாளர் தென்காசி ராஜா தெரிவித்துள்ளார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%