டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!

டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!


 


அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.


ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளது. நடப்பு சாம்பியனான இந்திய அணி உள்பட அனைத்து அணிகளும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் கனவோடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.


இந்த நிலையில், ஐசிசி டி20 உலகக் கோப்பைக்குத் தயாராவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 3 மாதங்கள் கால அவகாசம் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக பிசிசிஐ-ன் நேர்காணலில் அவர் பேசியதாவது: இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் மிகவும் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் இருக்கிறது. அதனையே அணி நிர்வாகமும் விரும்புகிறது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு இன்னும் எங்களுக்கு போதுமான நேரமிருக்கிறது.


முழு உடல்தகுதியுடன் இருப்பதன் முக்கியத்துவத்தை வீரர்கள் அறிந்திருப்பார்கள் என நம்புகிறேன். உலகக் கோப்பைத் தொடருக்குத் தயாராக இன்னும் எங்களுக்கு மூன்று மாதங்கள் இருக்கின்றன. வீரர்களுக்கு நாங்கள் கடினமான பொறுப்புகளை கொடுக்கிறோம். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டபோது, அவருக்கு மிகுந்த சவாலான பொறுப்பு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வீரருக்கும் சவாலான பொறுப்புகள் வழங்கப்படுகின்றன என்றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%