டெக்சாஸில் உள்ள வணிக நிறுவனத்தில் 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் மூன்று சக ஊழியர்களைச் சுட்டுக்கொன்று, பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
சான் அந்தோணியோ போலீஸ் கூறுகையில், நகரின் வடக்குப் பகுதியில் உள்ள வணிக நிறுவனத்தில் சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் பலியாகினர்.
காலை 8 மணியளவில் துப்பாக்கிச் சூடு வெடித்தபோது மற்ற ஊழியர்கள் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டதாக கேஎஸ்ஏடி-தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தகவல் கிடைத்ததும் போலீஸார் விரைந்து சென்று அந்தப் பகுதியை சுற்றிவளைத்தனர். சில மணி நேரங்களுக்குப் பிறகு துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு காயத்துடன் இருப்பதைக் கண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி
அவர் ஜோஸ் ஹெர்னாண்டஸ் காலோ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றாலும், இது தற்செயலானது அல்ல என்று போலீஸ் அதிகாரி வில்லியம் மெக்மானஸ் சனிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது கூறினார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து ஞாயிற்றுக்கிழமை துப்பறியும் நபர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?