தங்கம் ஒரு சவரன் விலை ரூ.86 ஆயிரத்தை நெருங்கியது புதிய உச்சத்தில் வெள்ளி
Oct 01 2025
13

சென்னை, செப். 29–
சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.85,600க்கு விற்பனை ஆனது. அதேபோல வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற நாள் முதலே, அவரது புதிய அறிவிப்புகள் எதிரொலியாகவும், சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக முதலீடு செய்து வருவதாலும், தங்கத்தின் விலை தொடந்து உயா்ந்த வண்ணம் உள்ளது.
தங்கத்தின் விலை நிகழாண்டு தொடக்கத்தில் சவரன் ரூ.57,200க்கு விற்பனையானது. கடந்த 6ம் தேதி ரூ.80,000-ஐ கடந்து புதிய உச்சத்தைத் தொட்டது. தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தைத் தொட்டுவிடும் என நிபுணர்கள், வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.
கடந்த சனிக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ரூ. 85,120-க்கும், கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ரூ. 10,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை.
இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 480 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 85,600-க்கும் கிராமுக்கு ரூ. 60 உயர்ந்து ரூ. 10,700-க்கும் விற்பனையாகிறது.
ஒரு சவரன் ரூ.86 ஆயிரத்தை நெருங்கியது நகை வாங்குபவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் வெள்ளி விலை கிராம் ரூ.136-க்கும், ஒரு கிலோ ரூ.1.36 லட்சத்துக்கும் விற்பனையானது.
தொழில் துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்துள்ள காரணத்தால் அதன் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.160-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,000 உயர்ந்து ரூ.1.60 லட்சத்துக்கும் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?