தந்திரக்கார நரி

தந்திரக்கார நரி

தந்திரக்கார நரி ஒன்று காட்டில் வாழ்ந்து வந்தது; உழைப்பில் உண்பது அதற்கு பிடிக்காத செயல். யாரையாவது, ஏமாற்றி சாப்பிடுவதையே வழக்கமாக கொண்டிருந்தது. 


உண்ணும், உறங்கும் நேரம் போக, 'அடுத்தவரை எப்படி ஏமாற்றுவது' என சிந்தித்தபடியே இருக்கும்.


ஒருமுறை, மரஉச்சிக் கிளையிலிருந்த தேன் கூட்டை, சிரமப்பட்டு எடுத்து வந்தது குட்டிக்கரடி. 


அதைக் கண்ட நரி, 'உன் அம்மா - அப்பா இடையே பயங்கர சண்டை நடக்கிறது; உடனடியாக வீட்டுக்குப் போ... இல்லையென்றால் உயிரோடு பார்க்க முடியாது...' என ஏமாற்றி, தேனடையச் சுவைத்தது.


இன்னொரு நாள் -


நன்கு பழுத்த பலாவை, சிரமத்தடன் எட்டிப் பறித்தது, யானை. அந்த நேரம் அங்கு வந்த நரி,


 ஆற்றில் குளிக்கும் உன் செல்லக்குட்டியின் காலை, பெரிய முதலை பிடித்து விட்டது. வலியில் பிளிறும் சத்தம், காதில் விழ வில்லையா... ஓடு...' என, ஏமாற்றி விரட்டி, பலாப்பழத்தைச் சுவைத்து மகிழ்ந்தது.


புல் மேய்ந்து கொண்டிருந்த கொழுத்த மானை, மூச்சிறைக்க விரட்டிச் சென்று வீழ்த்தி, ஆசையாக சாப்பிட முயன்றது புலி. 

திடீர் என அங்கு வந்த நரி, 'புலிக்குட்டி, சறுக்குப் பாறையில் விளையாடிய போது, வழுக்கி விழுந்து அடிப்பட்டு விட்டது...' என வழக்கம் போல ஏமாற்றி, மானை ருசித்தது.


நரியிடம் ஏமாறாத விலங்குகளே காட்டில் இல்லை. ஏமாந்த விலங்குகள், பதிலுக்கு ஏமாற்ற எண்ணாமல் வேலையை கவனித்துக் கொண்டிருந்தன.


அன்று அதிகாலை, உறக்கம் கலைந்து, கொட்டாவி விட்டபடி எழுந்தது நரி. கண்களைக் கசக்கி, குகை வாசலைப் பார்த்தது. மூச்சு விட முடியாமல் மிரண்டது.


பெரிய மலைப்பாம்பு ஒன்று, குகை வாசலில் படுத்திருந்தது. சத்தமின்றி வெளியேறிய நரி, குகை வாசலில் இருந்த மலைப்பாம்பை அப்புறப்படுத்த, சிங்கம், புலி, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகளிடம் உதவி கேட்டு கெஞ்சியது.


வழக்கம் போல ஏமாற்றுவதாக எண்ணி மறுத்துவிட்டன. வாட்டத்தோடு குகைக்கு திரும்பிய நரி, பாம்பின் வாலைப் பிடித்து இழுக்க முயன்றது. உறக்கம் கலைந்து, நரியை விழுங்கியது பாம்பு.


நீதி__ மொட்டுக்களே... *பிறரை ஏமாற்ற நினைத்தால் அதன் விளைவை நாம் அனுபவித்தே தீர வேண்டும்!*


எம் அசோக்ராஜா_ அரவக்குறிச்சிப்பட்டி 

திருச்சி __620015__

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%