தனியாமங்கலத்தில் 60 ஜோடிகள் பங்கேற்ற மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Dec 30 2025
15
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், தனியாமங்கலம் கிராமத்தின் சார்பில் 37-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் தனியாமங்கலம் -வெள்ளலூர் சாலையில் நடைபெற்றது.
பெரிய மாடு போட்டியில் 12 வண்டிகள் கலந்து கொண்டன. புலிமலைப்பட்டி முனிச்சாமி முதல் பரிசு ரூ. 33333 ம், விராமதி அடைக்கலம் இரண்டாம் பரிசு ரூ.22222-ம், கோட்ட நத்தம்பட்டி ரவி மூன்றாம் பரிசு ரூ.15,555-ம், காரைக்குடி சிவா நான்காம் பரிசு ரூ.11,111 -ம், அ. வல்லாளபட்டி காமாட்சி ஐந்தாம் பரிசும் ஆகியோர் வெற்றி பெற்றன. சிறிய மாட்டு போட்டியில் 48 ஜோடிகள் கலந்து கொண்டன. போட்டு இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது.
வெற்றிக்கோப்பை:
முதல் சுற்றில் புதுச்சுக்காம்பட்டி பி.எஸ். அதிபன் முதல் பரிசும், மாம்பட்டி செல்வேந்திரன் இரண்டாம் பரிசும், தனியாமங்கலம் சுந்தராசு மூன்றாம் பரிசும், சாத்தமங்கலம் அருண் நான்காம் பரிசும், கண்டிப்பட்டி தர்ஷினி நாச்சியார் ஐந்தாம் பரிசு பெற்றனர். இரண்டாவது சுற்றில் தேவாரம் விஜய் ரேடியோஸ் முதல் பரிசும், கரூர் ரஞ்சித் இரண்டாம் பரிசும், ராமநாதபுரம் பதனக்குடி சிவசாமி மூன்றாம் பரிசும், நரசிங்கம்பட்டி ராக்காயி ஆனந்த் நான்காம் பரிசும், தனியாமங்கலம் சுபாகரன் ஐந்தாம் பரிசு பெற்றனர். வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு விழா குழுவினர் பரிசுத்தொகையும், வெற்றிக்கோப்பையையும் வழங்கினர்.
மாட்டுவண்டி பந்தயத்தை வெள்ளலூர், சருகுவலையபட்டி, மட்டங்கிபட்டி, கீழையூர், சாத்தமங்கலம், கோட்டநத்தம்பட்டி, மேலூர் ஆகிய பகுதியிலிருந்து வந்திருந்த மாட்டு வண்டி பந்தய ரசிகர்கள் ரோட்டில் இருபுறம் நின்று ஆரவாரம் செய்து கண்டுகளித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை தனியாமங்கலம் கிராமபொதுமக்கள், இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?