தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்காக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் நியமனம்:
Dec 30 2025
13
இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழிகாட்டுதல்களின்படி, விவரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய வாக்காளர்களுக்கு வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்புகள் வழங்கப்படும். இந்திய தேர்தல் கமிஷன் நிர்ணயித்துள்ள 13 ஆவணங்களில் தங்களுக்கு பொருந்தக் கூடிய ஆவணத்தை வாக்காளர்கள் விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் முறையாக சரிபார்க்கப்பட்ட பின், தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்வார்கள்.
மேலும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பொருட்டு, வாக்காளர் பதிவு அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இந்நடைமுறை குறித்து விளக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியலானது பிப்ரவரி மாதம் 17-ந் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கை, முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் மற்றும் வாக்காளர் கணக்கெடுப்பு படிவத்தை சரியாக பூர்த்தி செய்து வழங்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகளாக 1,255 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களை சட்டசபை தொகுதி வாரியாக தேர்தல் கமிஷன் நியமனம் செய்துள்ளது. இவர்கள் அந்த பணியினை முழு வீச்சில் இறங்கி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
----------
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?