வந்தவாசி, ஜன 16:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பொட்டி நாயுடு தெரு முத்தமிழ் சமூகநீதி பேரவை மற்றும் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் குழந்தைகள் பங்கேற்ற பரதநாட்டியம், சிலம்பம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பொங்கலோ பொங்கல் என்ற தலைப்பில் சிறப்பு கவிதை வாசிப்பு, தமிழிசை பாடல்கள் உள்ளிட்டவை நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் பங்கேற்று, தமிழர் திருநாள் பற்றிய சிறப்புரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் ஜலால், துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், நகர செயலாளர் தயாளன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தெரு பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். முன்னதாக அப்பகுதி தெருக்களில் கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
பா. சீனிவாசன், வந்தவாசி.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?