தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாடு குறித்த ஆலோசனை
Nov 10 2025
87
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று(10.11.2025) தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மனநல மேம்பாடு குறித்த ஆலோசனைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு நாகராஜன் அவர்கள் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் வட்டார மேலாளர் திரு செந்தில் வேல் அவர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர் திரு அருள் தாஸ் அவர்கள் மற்றும் வட்டார வள பயிற்றுனர்கள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர்.
இறுதியில் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மாபெரும் விழிப்புணர்வு மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் திரு சொக்கர் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?