தமிழ்நாட்டில் ரூ.100 கோடியில் செமி கண்டக்டர் வடிவமைப்பு, சோதனை மையத்துக்கு டெண்டர்
Sep 18 2025
40

சென்னை: தமிழ்நாட்டில் நூறு கோடி ரூபாயில் செமி கண்டக்டர் வடிவமைப்பு மற்றும் சோதனை மையத்தை அமைக்க டிட்கோ நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது. செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை ஊக்குவிக்க, தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், சோதனை மையம், வடிவமைப்பு மையம், திறன் பயிற்சி வழங்கும் மையங்கள் உள்ளிட்டவை இதில் அமைக்கப்படும். முன்னதாக, தமிழ்நாடு அரசின் ‘செமிகண்டக்டர் மிஷன் 2030’ திட்டத்தின் கீழ், நூறு கோடி ரூபாய் செலவில் சென்னையில் ஒரு செமிகண்டக்டர் உயர்திறன் வடிவமைப்பு மற்றும் பரிசோதனை மையம் அமைக்கப்படும் என்று முதல மைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த மையம் ஐஐடி மெட்ராஸ் மற்றும் செமிகண்டக்டர் துறையில் முன்னணி நிறுவனங்களின் ஆதரவுடன், மேம்பட்ட செமிகண்டக்டர் தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும். தமிழ்நாட்டை உலகத் தரம் வாய்ந்த செமிகண்டக்டர் மைய மாக உருவாக்குவது இதன் நோக்கம். இது இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் செயலாக்க வசதியுடன் கூடிய ஒரு பயிற்சித் திட்டமாகும். தமிழ்நாடு அரசின் ‘செமிகண்டக்டர் மிஷன் 2030’ திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மேலும், கோயம்புத்தூர் சூலூர் மற்றும் பல்லடத்தில் நூறு ஏக்கரில் செமிகண்டக்டர் இயந்திர தொழில் பூங்கா உரு வாக்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. செமிகண்டக்டர் துறையில் திறமை இடைவெளியைக் குறைத்து, புதுமை களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி மேற் கொள்ளப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?