தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்’: முதலமைச்சர்

தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன்’: முதலமைச்சர்

சென்னை, செப். 11 - ‘

ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் இணைந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் ‘எக்ஸ்’ தள பதிவில், “தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க நமது ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அண்ணா பிறந்தநாளில் (செப்.15) தமிழ்நாடெங்கும் 68,000-க்கும் அதிகமான பூத் வாரியாக உறுதிமொழி எடுக்கவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். இந்த உறுதிமொழியில் தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவது, வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிராக நிற்பது, நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பது, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு எதிரான பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவது மற்றும் பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாப்பது ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%