தரிசனம் !

தரிசனம் !



சீனுவும் அவன் அம்மாவும் பெருமாள் சன்னதியிலிருந்து வெளிப்பட்டனர்.

இன் அடுத்ததாக தாயார் சன்னதி !


இறங்கி பார்த்த சீனு அசந்துபோ னான் !அவன் அம்மாவும்தான். கியூ பெரியதாகஇருந்தது. நிறைய பேர் நின்றுகொண்டிருந்தனர்.


" அம்மா ! கியூவ்ல நின்னுஅம்பாளைத்

தரிசனம் பண்ண ஒன் அவர்க்கு மேலாகும்போல தெரியறது. "


" ஆகட்டுமே ! வந்துட்டோம். எவ்வளவு நாழிகை ஆனாலும் நின்னு சேவிச்சு ட்டுப் போவோம்." என்றாள் அம்மா.


கியூவில் அம்மாவை முதலில் நிற்க வைத்து தான் பின்னால் நின்று கொண்டான் சீனு..கொஞ்சம் முன் னால் நின்றுகொண்டிருந்த நபர் சீனுவைப் பார்த்து கையசை

க்க பதிலுக்கு சீனு புன் சிரிப்புடன் கையசைத்தான்.


அதற்குள் சீனுவின் பின்னால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுபேர் வந்து நின்றனர்.


கியூ நத்தையைப் போல் மெல்ல ஊர்ந்தது. சீனுவின் நண்பர்கள் சிலர் சீனு அருகில் வந்து விசாரித்த்விட்டு கியூவில் நின்றுகொண்டனர்.


கோயில் ஊழியர் நாராயணன் சீனு அருகில் வந்து , " சீனு, அம்மாவ கூட் டிண்டு என் பின்னால வா. அஞ்சு நிமிஷத்தில தாயாரை சேவிச்சுட்டு வந்துடலாம். கியூவில நின்னு ஏன் சிரமப்படணும் ?" 


" இல்ல நாராயணா ! ...ஒண்ணு செய் என் அம்மாவை மட்டும் கூட்டிண்டு போ. நான் கியூவில நின்னே சேவி ச்சிக்கிறேன்." என்றான் சீனு.


" சரி. மாமி நீங்க வாங்கோ ! " சீனு வின் அம்மா நாராயணன் பின்னா டியே சென்றாள்.


" ஏன் சார் ! உங்கம்மாவோட நீங்களும்

போயிருக்கலாமோல்லியோ ?" பின்னால் நின்றுகொண்டிருந்தவர் கேட்க எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது சீனுவுக்கு.


சடாரென்று திரும்பினான். " ஆமாம் சார்,நீங்க இப்போ இப்படி பேசுவீங்க. நான் போயிருந்தால் ' ஹூம், இவனு க்கு மட்டும் வாழ்வு வந்தது பார் ' அப் படின்னும் பேசியிருப்பீங்க !" சீற்றத் துடன் எரிந்துவிழுந்தான். மனுஷன் மருண்டுபோய் வாயை மூடிக்கொ ண்டான் ! 


சரியாக ஒண்ணரை மணி அவகாசம்

ஆயிற்று..சீனு தாயார் சன்னதியை விட்டுக் கீழிறங்கினான். மிகவும் ஆயாசமாய் இருந்தது. அம்மாவை சிரமம் இல்லாமல்தாயாரை சேவிக்க வைத்தது நல்லதாப் போச்சு என நினைத்தான்.


படிக்கட்டில் அமர்ந்துகொண்டிருந்த அம்மா அருகில் சென்று உட்கார் ந்தான்.


" அம்பாளை நன்னா சேவிச்சயா.?"


""சேவிச்சேன்மா !.ஆனாலும் இன்னி க்கு அசாத்தியக் கூட்டம் !." 


" நாராயணன் கூட்டானோல்லியோ ! பேசாம வந்திருந்தா அம்பாளை ஈ.சி.யா சேவிச்சிருக்கலாம். இத்தன கஷ்டம் உனக்கு வந்திருக்காது !" 


" அம்மா ! எனக்குப் பின்னாடி என்.ஃப்

ரெண்ட்ஸ் நாலஞ்சி பேர் நின்னுண்டி

ருந்தா. நான் வரும் பட்சத்தில் அவா ளையும் அழைக்கத் தோணும். நாரா யணனால அத்தனை பேரையும் கூட் டிண்டுபோகமுடியாது. அதனாலதான் அவாய்ட் பண்ணினேன். பரவாயி ல்ல.கால் கடுக்க கியூவில நின்னு அம்பாளை சேவிச்சதிலும் ஒரு சுகம் இருக்கு...சரி கிளம்புவோமா ?" மெல்ல எழூந்துகொண்டான் சீனு.


" ஆமாண்டா சீனு !.நீ சொன்ன டெக்னி

கல் பாயிண்ட நான் யோசிச்சே பார் க்கல்ல. எல்லாம் நல்லதுக்கே !" என்ற படி எழுந்து நடந்தாள் சீனுவின் அம்மா சீனுவோடு.



வி.கே.லக்ஷ்மிநாராயணன்

             


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%