தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் இமாச்சல பிரதேச மாநிலமும் ஒன்று
Sep 20 2025
35

மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியது. ஒருமுறை அல்ல. பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுள்ளது.
வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளளனர். இவர்கள் எப்படியோ சமாளித்து வருகிறார்கள். இந்த நிலையில் கங்கனா ரணாவத் "நேற்று, என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கு மட்டுமே வியாபாரம் நடந்துள்ளது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். தயது செய்து என்னுடைய வலியையும் புரிந்து கொள்ளுங்கள். நான் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவள். என்னுடைய வீடும் இங்கேதான் உள்ளது" எனத் தெரிவிததுள்ளார்.
மவுன்டைன் ஸ்டோரி என்ற ரெஸ்டாரன்ட்-ஐ கங்கனா ரணாவத் மணாலியில் இந்த வருடம் தொடங்கினார். உண்மையான இமாச்சல பிரதேச மாநில உணவுகளை வழங்கும் உணவகம் என சமூக வலைத்தளங்கள் மூலம் பிரபலப்படுத்தினார்.
மணாலி சுற்றுலாவையே பெரிதும் நம்பி இருக்கிறது. கனமழை மற்றும் நிலச்சரிவால் இங்கு தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கங்கனா ரணாவத், பாஜக தலைவரும், மணாலியின் முன்னாள் எம்.எல்.ஏ.-வுமான கோவிந்த் சிங் தாகூர் உடன் சோலங்க், பல்சான் ஆகிய கிராமங்களுக்கு சென்றார். அப்போது அங்கும் வசிக்கும் மக்கள், வெள்ளத்தால் கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பாற்றது என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவால் சோலாங் கிராமம் முழுவதற்கும் ஆபத்து என தெரிவிக்கப்பட்டுள்ளது, பியாஸ் ஆறு படிப்படியாக தனது எல்லையை விரித்து கரையோர அரிப்பு அதிகமாகியுள்ளது. மேற்கொண்டு அரிப்பை தடுக்க ஆற்றின் திசையை மாற்றிட விடவேண்டும்" எனத் தெரிவித்தனர்.
கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதியில் இருந்து இமாச்சால பிரதேசத்தின் பெய்த கனமழை மற்றும் பருவமழை காரணமாக 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் 52 பேர் ஆவார்கள்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?