தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு குரு பூஜை விழாவை அரசுடன் இணைந்து நடத்த அனைத்து நாட்டுப் புற கலைஞர்கள் தீர்மானம்
மயிலாடுதுறை , நவ , 08 -
சென்னையில் தமிழ் மாநில அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநில சங்கத்தின் தலைவர் கலைமாமணி பழனி தலைமையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர் மற்றும் செயளாலர் விஜயாதாயன்பன் ஆகியோர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலைஞர்களுகாகான நிதி மற்றும் நிகழ்ச்சிகள் , நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தில் உள்ள நடைமுறைகளை தளர்த்துவது பற்றி மனு அளிக்கப்பட்டது. வருகின்ற நவம்பர் மாதம் 13-ஆம் தேதி நாடக உலகின் தந்தை தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 103-வது குரு பூஜை விழாவினை தமிழக அரசு விழாவாக நடத்தி வருகிறது.
முக்கியமான சில மாவட்டங்களில் அரசு சார்பில் நாடக விழா நடத்தி கலைஞர்களுக்கு பாராட்டு சான்று நினைவுப் பரிசுகளும் வழங்கி வருகிறது. நடப்பாண்டில் நாடக விழாவினை மயிலாடுதுறை மாவட்டத்தில் மாநில சங்கத்தின் சார்பாக அரசுடன் இணைந்து நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. நவம்பர் 13-ஆம்தேதி பாண்டிச்சேரியில் ஆண்டுதோறும் நடைபெறும் சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை விழாவில் மாநில நிர்வாகிகள், விழா பொறுப்பாளர்கள் அனைவரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பிப்பது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?