சேலத்தில் டிசம்பர் 4 அன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்த இருந்த பிரசாரப் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. தவெக நிர்வாகிகள் சேலம் காவல் ஆணையரிடம் அனுமதி கோரி மனு அளித்திருந்த நிலையில், அது நிராகரிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3 ஆம் தேதி கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுவதால், டிசம்பர் 4 அன்று பிரச்சாரக் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்க முடியாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அதற்கான முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகளிலும் காவல்துறையினர் ஈடுபட வேண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%