தாமோதர மாதம்

தாமோதர மாதம்



சாதுர்மாத விரதம் என்பது மழைக்காலமான ஆடி மாத பௌர்ணமி முதல் கார்த்திகை மாத பௌர்ணமி வரை, கடைபிடிக்கப் படுவது.

 ஆடிப் பண்டிகை எனத் தொடங்கி , இந்தக் காலத்தில் பல பண்டிகைகளும் , விரதங்களும் மேற்கொண்டு இறை வழிப்பாட்டுடன் கொண்டாடும் வழக்கம் தொன்று தொட்டு முதல் நம் நாட்டில் இருந்து வருகிறது. 


சாதுர் மாதங்களில் கடைசியானதும். சிறந்த மகிமைகள் பொருந்தியதுமான மாதம் தாமோதர மாதம் ஆகும். இறை வழிபாட்டுக்குரிய நான்கு சாதுர் மாதங்களில் இந்த மாதத்தை கார்த்திகை என்றழைப்பர். 


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாயின் அன்பினால் கட்டுண்டதால் தாமோதரன் என்று அழைக்கப்படுகிறார். 


ஆவணி மாதம் அஷ்டமி திதியில் அவதரித்த பகவான் , கோகுலத்தில் வளர்ந்து , தனது பால லீலைகளால் பக்தர்களைக் கவர்கிறார்.

இந்த லீலையானது அக்டோபர் ஏழாம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.


கார்த்திகை மாதம் தீப வழிபாட்டுக்கு உரியது. கார்த்திகையை போல் இந்த தாமோதர மாதத்தில் கோவில்களிலும், வீடுகளிலும் நெய் தீபங்கள் கொண்டு அலங்கரித்து கண்ணனை வழிபடுவர்.


பத்ம புராணத்தில்   கிருஷ்ணனே  கூறுகிறார்

"இடங்களில் துவாரகையும்,நாட்களில் ஏகாதசியும்,இலைகளில்  துளசியும், மாதங்களில் கார்த்திகையும் விருப்பமானவை"

( பத்மபுராணம்  உத்தர காண்டம் 112.3)  


தாமோதரர் என்றால் கிருஷ்ணரை குறிக்கும். தாம என்றால் கயிறு. உதர என்றால் வயிறு. அன்னை யசோதா தேவி உரலில் கயிற்றைக் கொண்டுக் கண்ணனைக் கட்டிய நிகழ்ச்சியை ஞாபகப்படுத்தும் நிகழ்ச்சியாகவும்,கிருஷ்ணரின் பிரிய பக்தரான ராதையை வழிபடும் மாதமாகவும்,தாமோதர மாதம் கொண்டாடப்படுகிறது.


அதே போல், புண்ணிய மாதங்கள் அனைத்திலும் அதி புண்ணிய மாதம் தாமோதர மாதம் என்று ஸ்கந்த புராணமும் இம்மாதத்தின் மகிமைகளச்

சொல்கிறது.


ஆடிப் பண்டிகையில் தொடங்கி விநாயகச் சதுர்த்தி, ஶ்ரீகிருஷ்ண ஜயந்தி, நவராத்திரி,எனப் பண்டிகைகளைக் கொண்டாடி ,வருடத்தில் கடைசியாக இந்த தாமோதர மாதத்தில் நாம் கொண்டாடும்

 முக்கியமான பண்டிகை நாட்கள் பல.

தீபாவளி, லக்ஷ்மி பூஜை, பகுலாஷ்டமி - ராதா குண்டம் உருவான நாள், துளசி - சாளக்கிராம திருக்கல்யாணம், கோவர்த்தன கிரி பூஜை - 

இப்படிப் பல முக்கியமான விழாக்கள் இந்த மாதத்தில் தான் நடைபெரும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


தாமோதர விரதம் கடைபிடிக்கும் பக்தர்கள் வாழ்வில் அனைத்து நல்ல நிலைகளையும் அடைவர்.


1. ஹரே கிருஷ்ண மஹாமந்திர ஜபமும். 

2. கிருஷ்ணருக்கு நெய் தீபம் காட்டுவதும், 

3. உணவுக்கட்டுப்பாடும் தாமோதர மாத விரதத்தின் முக்கிய மூன்று சிறப்பம்சங்களாகும்.


கிருஷ்ணரின் பால லீலைகளைப் பாடும் தாமோதர அஷ்டகம் படிப்பது வழக்கம்.


தாமோதர அஷ்டகம் கிருஷ்ண த்வைபாயன வியாசரால் பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டு, நாரத முனிவர் மற்றும் செளனக ரிஷியின் உரையாடலில் சத்யவ்ரத முனி பேசியது.


இத்துணை மகத்துவங்கள் பெற்ற தாமோதர கார்த்திகை மாதத்தில் கண்ணனை வழிபட்டு மேன்மை அடைவோம்.



சோபனா விச்வநாதன்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%