திட்டக்குடியில் பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது
Nov 27 2025
34
தமிழ்தேசியத் தலைவர் பிரபாகரன் 71வது பிறந்தநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வழிகாட்டுதலின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி தனியார் பிரபு மருத்துவமனையில் ரத்ததான முகாம் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கு விழா கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்தனர். மேலும் ரத்ததானம் செய்தவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திட்டக்குடி பல்வேறு இடங்களில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. இதில் திட்டக்குடி தொகுதி குருதி கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சுந்தரபாண்டியன்,
மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபு,கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?