திட்டக்குடி அருகே பொடையூர்,கல்லூர் ஆகிய கிராமங்களில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அமைச்சர் சி.வெ.கணேசன் பங்கேற்பு
Sep 21 2025
33

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மா பொடையூர்,கல்லூர் ஆகிய கிராமத்தில் பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பொதுமக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்ட அமைச்சர். பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் இரண்டு கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு
அமைச்சர் சி.வெ.கணேசன் புடவைகளை வழங்கினார். முன்னதாக அமைச்சருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது இதில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் அமிர்தலிங்கம்,செங்குட்டுவன், முன்னாள் சேர்மன் சுகுணா சங்கர், பொடையூர் சக்திவேல், அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சேதுராமன் திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?