திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு விழா

திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ், பரிசளிப்பு விழா



அறந்தாங்கி, ஜன.- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு உயர் கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் கலை இலக்கிய அறிவுசார் போட்டிகளில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, கல்லூரித் திருவள்ளுவர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ம. துரை தலைமை தாங்கி, வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுத்தொகையையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழா ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சி. மேனகா, முனைவர் க.செல்வி, ரா.ராஜலட்சுமி, முனைவர் மு.முரளி, ந.வனிதா, மு.மோகனா, த.சுபா ஆகியோர் செய்திருந்தனர். பேரா.மு. பழனித்துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முன்னதாக தமிழ்த் துறை தலைவரும் திருக்குறள் போட்டி ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர் கா.காளிதாஸ் வரவேற்று பேசினார். தமிழ்த் துறை பேரா. முனைவர் கணேஷ் குமார் நன்றி கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%