" மனைவியோடு அன்பாய் சந்தோஷமாய் மகன் பிரபுவுடன் புரிதலாய் விளையாடி வீட்டு கஷ்ட்ட நஷ்ட்டங்களை புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து நல்ல குடும்பமாய் வாழ வேண்டும் என்பது ஆசை .
மனைவி ராதிகா இல்லத்தரசி இருந்தும் வீட்டில் இருந்தபடியே பல கைத் தொழில்கள் செய்து வருமானம் பார்க்க தொடங்கி விட்டாள் .
மகன் பிரபு ஆறாம் வகுப்பு படிக்கிறான் . சுட்டியான விளையாட்டான நன்கு படிக்கும் மாணவன் .
நவீன் கணவன் அரசாங்க பள்ளியில் ப்யூன் . சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து மாலை சரியாக வீடு திரும்புவான் .
ராதிகா சரியான உழைப்பாளி சிக்கனப் பேர்வழி .நவீன் விட்டுக் கொடுத்து மனைவியை நேசித்து வாழும் முழுமையான தந்தை .
இருந்தும் வாரம் ஒரு முறை குடிக்கும் பழக்கம் உண்டு . இந்த பழக்கம் ராதிகாவிற்கு பிடிக்கவில்லை . வாரம் என்று தொடங்கி நாள் பிறகு மணி என்று உருவம் பெரும் என்று நவீனை கண்டித்தாள் .
பல முறை சொல்லிப் பார்த்தும் கண்டித்து பார்த்தும் சண்டை போட்டு பார்த்தும் எந்த பலனும் இல்லை .
ஒரு நாள் திடீர் என்று தன் மகன் பிரபுவுடன் வீட்டை விட்டு வெளியில் சென்று விட்டாள் ராதிகா .
கைத்தொழிலை வைத்துக் கொண்டு பிரபுவை படிக்க வைக்க ஆரம்பித்து தன் வாழ்க்கையை நவீன் இல்லாமல் வாழத் தொடங்கி விட்டாள் .
பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது நடந்தது போல் தோன்றியது நவீனுக்கு . தனிமை வாழ்க்கை மகன் அருகில் இல்லாத சோகம் , மனைவி கைவிட்ட ஏக்கம் ஆண்டுகள் நகர்ந்தது .
நன்கு உறங்கிக் கொண்டிருந்த நவீன் இத்தனையும் கனவில் நடந்தது என்பதை உணர்ந்தான் . கடந்த ஆறு மாதமாக குடியை விட்டு விட்டான் .
அடிக்கடி மனைவி மகன் பற்றிய கவலை தேடல் அழுகை செய்த தவறுக்கு வருந்திய நிலை இது தான் நவீன் தனக்கு கொடுத்துக் கொண்ட தண்டனை .
நவீன் உடன் பணி செய்யும் ஆசிரியர் செல்வம் ரொம்ப நல்லவர் , நவீன் திருந்தி வாழ்கிறான் தவறு செய்வதில்லை என்பதை புரிந்து கொண்டு, ராதிகா பிரபுவிடம் சென்று நவீன் நிலை குறித்து பேசினார் .
நல்ல பதில் கிடைத்தது மனைவி ராதிகா வளர்ந்த தன் மகன் பிரபுவை பார்த்து ஆனந்த கண்ணீர் மல்க மீண்டும் தன் குடும்பத்தில் இணைந்தான் நவீன் .
குடியினால் தன் வாழ்வு பட்ட துக்கத்தை கஷ்ட்டத்தை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்பு போல சொல்லி திருத்தி வந்தான் நவீன் .
மனம் திறந்து தன் வாழ்க்கை கதையை கூறுவான். மன நிறைவும் ஆத்ம திருப்தியும் நிறைந்தது தானே வாழ்க்கை ..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .